Connect with us

மகரம் ராசி ஏப்ரல் மாதம் ராசி பலன்கள் 2018!

ஆன்மீகம்

மகரம் ராசி ஏப்ரல் மாதம் ராசி பலன்கள் 2018!

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் சங்கடங்களை சமாளித்து சாதனை புரியும் மாதமாக இருக்கப் போகிறது. எதிலும் போராடி தான் வெற்றி பெற இயலும். தைரியமாக முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். குரு பத்தாம் வீட்டில் இருப்பதால் வேலைச்சுமை அதிகரிக்கும். ஒரு சில நேரங்களில் தாழ்வு மனப்பான்மை ஏற்படும்.

உங்கள் ராசியில் கேது இருப்பதால் வீண் குழப்பங்கள், டென்ஷன் வரக்கூடும். தேவையில்லாத சிந்தனைகள், தூக்கமின்மை, எதிலும் சந்தேகம் வரக்கூடும். முடிந்த அளவிற்கு தினமும் பத்து  நிமிடமாவது தியானம் செய்யுங்கள். ராகு பகவான் ஏழாம் வீட்டில் இருப்பதால் கணவன் மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

சனி பகவான் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விரயச் சனி தொடர்வதால் வீண் பழி, ஏமாற்றங்கள், பணம் விரயம் ஏற்படும்.தாயாரின் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் ராசியில் ஏப்ரல் 30-ம் தேதி செய்வாய் கேதுவுடன் இணைவதால் உடல்நலம் பாதிப்புகள் உண்டாகும். சகோதர வகையால் அலைச்சல் ஏற்படலாம்.

அலுவலகத்தில் நேரத்திற்கு வேலைகளை முடித்து விடுங்கள். உங்களிடம் ஒப்படைக்கும் சிறிய வேலைகளைக் கூட அலட்சியம் காட்டாமல் விரைந்து முடித்து விடுங்கள்.

வியாபாரத்தில் ஏற்ற இறங்கங்கள் இருக்கும். சித்திரை மாதத்திற்கு  பிறகு உங்களுக்கு லாபம் கிட்டும். செய்கின்ற தொழிலில் போட்டி நிலவும்.

மொத்தத்தில் இந்த ஏப்ரல் மாதம் மகரம் ராசியினருக்கு சாதனையை நோக்கி நகரும் மாதமாக இருக்கப் போகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top