Connect with us

ராஜீவ்காந்தி கொலையாளி ரவிச்சந்திரனுக்கு 2 வார பரோல்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

செய்திகள்

ராஜீவ்காந்தி கொலையாளி ரவிச்சந்திரனுக்கு 2 வார பரோல்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிக்கி கடந்த 26 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்பட 8 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இந்த வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் என்பவர் தனக்கு ஒருமாதம் பரோல் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது கடந்த சில நாட்களாக விசாரணை நடந்த நிலையில் இன்று இந்த மனுமீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பின்படி ரவிச்சந்திரனுக்கு 2 வார பரோல் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து அவர் இன்னும் சில மணி நேரங்களில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top