என் வாழ்க்கையை படமாக்க வேண்டாம்- மாதுரி தீட்சித்

90களில் ஹிந்தி ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் மாதுரி தீட்சித். மாதுரி தீட்சித் என்று ஹிந்தி திரையுலகமே ஒரு காலத்தில் தவம் கிடந்தது.இவர் 93ம் ஆண்டு நடித்த கல்நாயக் படத்தில் இடம்பெற்ற சோளி கே பீச்செ கியாஹே பாடல் மிக புகழ்பெற்றது.

புகழ்பெற்ற மாதுரி தீட்சித் சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி செட்டில் ஆகி விட்டார். இந்நிலையில் இவரின் வாழ்க்கைக்கதையை திரைப்படமாக எடுக்க இவரிடம் அனுமதி வேண்டி சிலர் செல்ல அதற்கு மாதுரி ஒத்துக்கொள்ளவில்லையாம்.

தற்போது என் வாழ்க்கை சம்பவங்களை சினிமா படமாக உருவாக்க வேண்டாம். 

காரணம், இன்னும் என் வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் அனுமதி தர மறுத்துவிட்டேன்’ என்று மாதுரி தீட்சித் கூறி இருக்கிறார்.