பிக்பாஸ் வீட்டிற்குள் மூன்றாவது இடத்தைப் பிடித்த மதுமிதா!!

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 வது நாளை முடித்த நிலையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, அதற்குள் 50 நாட்கள் ஆகிவிட்டதா? என போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சியிலே உள்ளனர்.

டிஆர்பியை அதிகரிக்க தயாரிப்புக் குழுவும் எதாவது பிரச்சினையை இழுத்து விட்டுக் கொண்டே உள்ளது, இதற்கு மத்தியில் டாஸ்க்குகளும் ஆர்வத்தை தூண்டும்படியாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் மூன்றாவது இடத்தைப் பிடித்த மதுமிதா!!


வார இறுதியான நேற்று எலிமினேஷன் பிராசஸ் நடந்தது. எப்போதும் போல்  கமல்ஹாசன் உரையாற்றினார். பின்னர் 50 நாட்கள் இந்த வீட்டில் தங்களை நிலைத்து இருப்போருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

50வது நாளை ஒட்டி போட்டியாளர்கள் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நபர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் கூறினார்.

எப்போதும் போல டாஸ்க்கு சிறப்பாக விளையாடும் தர்ஷன் முதல் இடமும், எல்லோரையும் கலகலப்பாக்கும் சாண்டி இரண்டாவது இடமும், அவ்வப்போது சண்டைகள் போட்டாலும் அறிவுரைகள் அள்ளி வழங்கும் நம்ம பொண்ணு மதுமிதா மூன்றாவது இடமும் பெற்றனர். அதனால் அவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது. 

மேலும் இந்த பதக்கங்களை வீட்டிற்கு செல்லும்போது எடுத்து செல்லலாம் என்றும் கூறப்பட்டது.