மாதவனின் பின்னால் சிலுவை உபநயன புகைப்படத்தை விமர்சித்த பெண்

நேற்று ஆவணி அவிட்டம் என்பதால் பூணுல் அணியும் பிராமணர்கள் உட்பட பலரும் தங்கள் பூணூலை மாற்றி வேறு பூணுல் அணிவர். பிராமணர்கள் மட்டுமல்லாமல் சில குறிப்பிட்ட பூணுல் அணியும் சமூகத்தவரும் பூணுலை மாற்றுவர்.

நடிகர் மாதவனும் தன் பூணூலை மாற்றி அதை புகைப்படமாக பகிர்ந்து இருந்தார். இதை பார்த்த ஒரு பெண் ஒருவர் பின்னணியில் ஒரு சிலுவைக்குறியீடு உள்ளதை வைத்து மாதவனை விமர்சித்துள்ளார்.

பின்னணியில் அவர்கள் ஏன் குறுக்கிடுகிறார்கள் ?! அது ஒரு மந்திரா? நீங்கள் என் மரியாதையை இழந்துவிட்டீர்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்து கடவுள்களைக் காண்கிறீர்களா? இதெல்லாம் நீங்கள் இன்று செய்த போலி நாடகம்!

என்று விமர்சித்துள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள மாதவன் தான் அனைத்து மதங்களையும் நேசிப்பதாக கூறியுள்ளார்.

https://twitter.com/jiks/status/1162133284320681986?s=20