ரெண்டுக்கு பிறகு ஜோடி சேரும் மாதவன் அனுஷ்கா

ஹேமந்த் மதுக்கர் இயக்கும் புதிய திரைப்படத்தில் மாதவன் – அனுஷ்கா இணைந்து நடிக்க உள்ளனர். 2006ம் ஆம் ஆண்டு இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ரெண்டு திரைப்டத்தில் அனுஷ்கா மாதவன் இணைந்து நடித்திருந்தனர்.

அதற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் அனுஷ்கா வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்து வந்திருக்கிறார். 

அதற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மாதவன், அனுஷ்காவுடன் அஞ்சலி, மைகேல் மேட்சென், சுப்பராஜு, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தை கிரன் ஸ்டியோஸ், காஸ்மோஸ் எண்டர்டெயிண்மெண்ட் மற்றும் பீப்பல் மீடியா ஃபேக்ட்ரி இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. 

இப்படம் அடாமஸ் ஒலி அமைப்பில் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து உருவாக்கப்பட இருக்கிறது என்றும் இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் இசை அமைக்க இருக்கிறார் என்றும் தகவலையும் தெரிவித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு வெளியாக இருக்கிறது என்றும் அறிவித்துள்ளனர்.