Connect with us

கவினுக்கு சப்போர்ட் பண்ணி மதுமிதாவிடம் கோபப்படும் லோஸ்லியா

பொழுதுபோக்கு

கவினுக்கு சப்போர்ட் பண்ணி மதுமிதாவிடம் கோபப்படும் லோஸ்லியா

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படுசரிவினைச் சந்தித்தது.

இதனை ஈடுகட்டவே வீட்டிற்குள் நுழைந்தார் வனிதா. வனிதா வந்ததும் போதும் டிஆர்பி வேற லெவலாக எகிறியது. அதிலும் நேற்றைய எபிசோடு ஆக்ஷன் படம்போல் இருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

கவினுக்கு சப்போர்ட் பண்ணி மதுமிதாவிடம் கோபப்படும் லோஸ்லியா

அதாவது ஆண் போட்டியாளர்கள், பெண்களை மிதிக்கின்றன என கோபத்துடன் கூறுகிறார் மதுமிதா. அப்போது கவின் போல நான்கு பெண்களை காதலித்து நிகழ்ச்சியில் தொடர வேண்டிய அவசியமில்லை என்றும் கூறுகிறார். 

அங்கே இருந்த லோஸ்லியா, முடிந்த பிரச்சினைகளைப் பற்றி இப்போது மீண்டும் பேசுவது ஏன் எனவும் கோபம் உள்ளவர்களிடம்  நேரடியாக பேச வேண்டுமே தவிர, யாரைப் பற்றியும் மறைமுகமாக பேச வேண்டாம், அதிலும் என்னைப் பற்றி பேச வேண்டாம் என்று கத்துகிறார்.

சேரனுக்கு பிரச்சினை நடக்கும்போது வாயைத் திறக்காத லோஸ்லியா கவினுக்கு பிரச்சினை என்றதும் தாங்கிக் கொள்ள முடியாமல் கதறுவதற்குக் காரணம் என்ன? என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top