Connect with us

5ஆம் கட்ட ஊரடங்கு: நாளை முதல் என்னென்ன தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு

செய்திகள்

5ஆம் கட்ட ஊரடங்கு: நாளை முதல் என்னென்ன தளர்வுகள் தமிழக அரசு அறிவிப்பு

நாளை முதல் ஜூன் 30 வரை ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை அடுத்து தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

  • நாளை முதல் வாடகை, டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேருடன் இ- பாஸ் இன்றி மண்டலங்களில் பயணிக்கலாம்
  • நாளை முதல் ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர் பயணிக்கலாம்
  • சைக்கிள் ரிக்‌ஷாக்களுக்கும் நாளை முதல் அனுமதி வழங்கலாம்
  • சென்னையில் நாளை முதல் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி
  • வரும் 8ம் தேதி முதல் டீக்கடைகளில் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கலாம்
  • சென்னையில் 8ம் தேதி முதல் ஓட்டல், டீக்கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி
  • சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும்
  • வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்களும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்
  • ஒரே நேரத்தில் 5 வாடிக்கையாளர்கள் மேல் இருக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்
  • சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகபட்சமாக 40 நபர்களுடன் செயல்பட அனுமதி
  • சென்னையில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி
  • வாடகை மற்றும் டாக்சி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் இயங்க அனுமதி
  • ஆட்டோக்களில் 2 பயணிகள் பயணிக்க அனுமதி
  • உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்
  • 5 பேருக்கு மேல் ஒரு கடையில் கூடக் கூடாது
  • டீக்கடை, உணவகங்களில் 8ம் தேதி முதல் உட்கார்ந்து சாப்பிட அனுமதி
  • நாளை முதல் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை இயங்கும்
  • வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் திறக்க அனுமதி
  • குளிர்சாதன வசதியின்றி 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
  • ஐ.டி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி
  • 20 சதவீத ஐ.டி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற ஊக்குவிக்க வேண்டும்

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Continue Reading
To Top