Connect with us

சென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா? பரபரப்பு தகவல்

செய்திகள்

சென்னையில் மட்டும் ஊரடங்கு நீட்டிப்பா? பரபரப்பு தகவல்

தமிழகத்தில் சென்னையில் மட்டுமே மிக அதிக பாதிப்பு இருப்பதால் சென்னையில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்றும், மற்ற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப் வாய்ப்பிருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் 11 நகரங்களில் மட்டுமே கொரோனா வைரஸ் அதிகம் பரவி இருப்பதாகவும் அதில் ஒன்று தமிழகத்தின் சென்னை என்றும் இந்த 11 நகரங்களில் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவில் 70 சதவிகிதம் பாதிப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
இதனையடுத்து இந்த 11 நகரங்களில் மட்டும் ஊரடங்கை நீட்டித்துவிட்டு மற்ற பகுதிகளிலும் ஊரடங்கு தளர்த்தப் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Continue Reading
To Top