சுய உதவிக் குழுவில் இனி ரூ. 1 லட்சம் வரை கடன்- பட்ஜெட்டில் அறிவிப்பு!!

2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று புதிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது, இந்த பட்ஜெட் மக்களுக்கு சாதகமான திட்டங்களை அறிவிக்கவில்லை என்ற கருத்தை மிக வலுவாக வலியுறுத்துகிறது. நிறைய பொருட்களின் விலை அதிகமாகி உள்ளது, குறிப்பாக பெண்களை அதிகம் பாதிக்கும் வகையில் தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.

நிதியமைச்சர் அவர் தனது பட்ஜெட் உரையில், ”பெண்களின் பங்களிப்பால் தான் நாட்டை உயர்த்த முடியும். அவர்களது பங்களிப்பு அவசியமாக உள்ளது. ஆண்களுக்கு இணையாக அவர்களும் வாக்களித்து உள்ளனர். இதுவரை அவர்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மூலம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இது இனி ஒரு லட்சம் என்று உயர்த்தப்படும். 

சுய உதவிக் குழுவில் இனி ரூ. 1 லட்சம் வரை கடன்- பட்ஜெட்டில் அறிவிப்பு!!

அவையில் பெண் எம்.பி.,களின் எண்ணிக்கையும் 78 ஆக உள்ளது. கிராமப்புற பொருளாதாரம் பெண்களால் வளர்ச்சி பெறுகிறது.

நாட்டில் ஏற்கனவே பெண்களுக்கு சுய உதவிக்குழுக்கள் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் இதற்கென்று சிறு குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்களின் அத்தியாவசிய தேவைக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு வட்டியும் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் இந்த திட்டத்தை பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது இந்த தொகையை சிறிது அதிகரித்து கொடுத்துள்ளனர். 

தங்கத்தின் விலையில் கை வைத்த காரணத்தினாலோ என்னவோ, பெண்கள் இத்திட்டத்தினை கொண்டாடவில்லை.