Connect with us

எலுமிச்சை தோலின் நன்மைகள்!

உடல் நலம்

எலுமிச்சை தோலின் நன்மைகள்!

உடலிலுள்ள கழிவுகளை அகற்ற, கொழுப்பு குறைக்க, எலும்பு உறுதிபட எலுமிச்சை தோலில் சக்தி உள்ளது. இதனை சிறு துண்டுகளாக நறுக்கி , வெயிலில் உலர்த்தி பொடி செய்து காற்று போகாத ஏர் டைட் கன்டைனரில் வைத்து கொள்ளலாம். வெயிலில் வைத்து பக்குவமாக செய்ய முடியாதவர்கள் இதனை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.

Lemon peel benefits

உடல் மெலிவு அடைய:

காலை எழுந்தவுடன் வெறும் வயற்றில் சூடான நீரில் இந்த பொடி 1 ஸ்பூன் போட்டு தேன் கலந்து அருந்தலாம். இதில் பொலிபனொல் பிளவோனோய்ட்ஸ் இருப்பதால் கொழுப்பு குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் பெக்டின் (Pectin) என்கிற சத்து இருப்பதால் உடல் எடையை மிக விரைவில் குறைக்கலாம்.

முகத்தில் கரும்புள்ளிகள் சருமம் நோய் மறைய:

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், படை, தோல் சுருங்குதல், கருமையான திட்டுகள் இவை அனைத்திற்கும் எலுமிச்சை தோல் பொடி நிவாரணம் தரும். இந்த பொடியில் ரோஸ் வாட்டர், தயிர், ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவலாம். எதிர் ஆக்சிஜனேற்றி(Anti-oxidants) பண்புகள் உள்ளதால் இது இளமையான தோற்றம் கொடுக்கும் , தோல் சுருக்கத்தில் இருந்து காக்கும் தன்மை கொண்டது.

பற்கள் வெண்மையாக மாற:

வாய் துர்நாற்றம், சொத்தை, ரத்தம் கசிதல் போன்றவை இருந்தால், இந்த பொடியினால் பல் துலக்கினால் ஓரளவு விடுபடலாம்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top