Connect with us

5 ஆண்டு சட்டப்படிப்பு: விண்ணப்பம் கிடைப்பது எப்போது?

செய்திகள்

5 ஆண்டு சட்டப்படிப்பு: விண்ணப்பம் கிடைப்பது எப்போது?

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும், இந்த விண்ணப்பங்களில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஆண்டு முழுக்க முழுக்க ஆன்லைனிலேயே கல்லூரி மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முதல் கல்லூரிகள் ஒதுக்குவது வரை அனைத்துமே ஆன்லைனில் நடைபெறும் என்றும் தெரிகிறது

இந்த நிலையில் 5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் எப்போது கிடைக்கும் என்று சட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் இதுகுறித்து அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் சட்டக்கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப்படிப்பு படிக்க வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. tndalu.ac.in என்ற இணையதளத்தில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஐந்தாண்டு சட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top