திவ்யாவை கலாய்த்த இணையவாசிகள்

தமிழ், கன்னடத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் ரம்யா. தமிழில் சிம்பு நடித்த குத்து படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

Divya Spandana, Actor, Politician and National Head of Digital Media team of Congress, in New Delhi on 17/3/2018 The Week photo by Arvind Jain

இவர் 2013ம் ஆண்டு கர்நாடகாவின் மண்டியாவில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி எம்பியாக வெற்றி பெற்றார். இதையடுத்து அடுத்த ஆண்டே நடந்த மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் மஜத வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.  இதன் பிறகு மண்டியா தொகுதி பக்கமே இவர் தலைகாட்டவில்லை. அவ்வளவு ஏன் சட்டப்பேரவை தேர்தல், இடைத்தேர்தல், நகரசபை தேர்தல் என்று எதற்கும் ஓட்டு போட வரவே இல்லை. இதனால் காங்கிரசாரிடம் கடும் அதிருப்தியை சம்பாதித்தார்.

இதையடுத்து காங்கிரஸ் சமூக வலைதளப்பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்தார்; இந்ந நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில், வாக்களிக்க தகுதியுள்ள இளைஞர்களே அனைவரும் வாக்களியுங்கள் என்று கருத்தை பதிவிட்டார்.  இதை பார்த்த நெட்டிசன்கள், எங்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு நீங்கள் முதலில் வாக்களியுங்கள். வாக்களிக்காமல் புறக்கணிக்கும் உங்களது அறிவுரை அவசியமற்றது என்று பயங்கரமாக கலாய்த்துள்ளனர்.