லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் ஹவுஸ் ஓனர்- சூர்யா வெளியிட்ட டீசர்

பிரபல தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். நான் மகான் அல்ல, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களில் அம்மாவாக நடித்திருப்பார்.

குடும்ப பாங்கான வேடங்களில் வெளுத்து வாங்கும் லட்சுமி ராமகிருஷ்னண் பிரபலமானது டிவி நிகழ்ச்சியை வைத்துதான்.

இவர் ஆரோகணம் அம்மணி உள்ளிட்ட படங்களை ஏற்கனவே இயக்கியுள்ளார். இதில் அம்மணி படம் வரவில்லை.

இந்நிலையில் ஹவுஸ் ஓனர் என்ற புதிய படத்தை இயக்கி வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் அதற்கான டீசரை நடிகர் சூர்யாவை வைத்து இன்று மாலை வெளியிட்டார்.