டிக் டாக்கால் வேலை இழந்த இளம் பெண் போலீஸ் அதிகாரி

இந்த டிக் டாக் அப்ளிகேசன் படுத்தும் பாடு சொல்லி மாளாது. அந்த அளவு பலருக்கு இது தொந்தரவாக உள்ளது. பாஸிட்டிவாக தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட இந்த சீன நிறுவனத்தின் அப்ளிகேசன் பலரது வாழ்க்கைக்கே வினையாகி விடுகிறது.

சென்னை அபிராமி பிரியாணி சுந்தரத்துடன் ஏற்பட்ட நட்பு விபரீதமாகி தன் குழந்தைகளை கொன்றது இந்த அப்ளிகேசனால்தான்.

இந்நிலையில்

குஜராத் மாநிலத்தில் மெஹசானா மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியாக அர்பிதா சவுத்ரி என்ற பெண் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு டிக்டாக் செயலியில் ஈடுபாடு அதிகம் . இவர் சீருடை இல்லாமல் கலர் உடையில் லாக் அப் அருகில் நின்று ஹிந்தி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளார். இது வைரலாக பரவியுள்ளது. ஒரு காவலரே பொறுப்பில்லாமல் இப்படி நடந்து கொள்ளலாமா என பலரும் கேள்வி எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் அர்பிதா சவுத்ரியை இடைநீக்கம் செய்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் மஞ்சிதா உத்தரவிட்டுள்ளார். பணி நேரத்தில் சீருடை இல்லாமல் இருந்ததற்காகவும், காவலர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களை மீறி காவல்நிலையத்திற்குள் வீடியோ எடுத்ததற்காகவும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மஞ்சிதா தெரிவித்துள்ளார்.