கூலித்தொழிலாளியின் குடிசை வீட்டுக்கு 2.92 லட்சம் மின் கட்டணம்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக மின்சார கணக்கெடுப்பு எடுக்காத நிலையில் தற்போது மின்சார கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருவதும் அந்த மின்சார கட்டணம் பல மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும் பெரும்பாலானோர் குற்றம் சாட்டினார் என்பதும் தெரிந்ததே

இதுகுறித்து நடிகர் பிரசன்னா, நடிகை டாப்சி, நடிகை கார்த்திகா நாயர் உள்பட பல நடிகர் நடிகைகள் தங்களுடைய ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கரூரை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு மின் கட்டணம் எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவரிடம் அதிகாரிகள் அவருடைய வீட்டிற்கு 2.92 லட்சம் மின் கட்டணம் வந்திருப்பதாக கூறியதை கேட்டதும் அவர் மயக்கம் போடாத நிலை ஏற்பட்டது

இதுவரை அவர் 100 யூனிட்டுகள் மட்டும் தான் மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளார் என்பதும் அவர் இதுவரை மின் கட்டணம் செலுத்தியதே இல்லை என்பதும் பின்னர் தெரிந்தது.

அதன் பின்னர் மின் வாரிய அலுவலர்கள் அவருடைய மின் கட்டணத்தை மீண்டும் சோதனை செய்தபோது கம்ப்யூட்டரில் நடந்த தவறால் இந்த குழப்பம் நேர்ந்ததாகவும் இதை சரிசெய்து குறித்து விசாரணை செய்வதாகவும் கூறி அவரிடம் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது