‘மீ டூ’ பிரச்சனை: உங்களை ஏமாற்றிவிட்டேன், மன்னித்துவிடுங்கள்: குஷ்பு

'மீ டூ' பிரச்சனை: உங்களை ஏமாற்றிவிட்டேன், மன்னித்துவிடுங்கள்: குஷ்பு

மீ டூ பிரச்சனையில் உங்கள் எல்லோரையும் ஏமாற்றியதற்கு மன்னிக்கவும் என்று நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக உலகம் முழுவதும் ‘மீ டூ’ ஹேஷ்டேக் பிரபலம் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாக மட்டுமே இது தமிழகத்திலும் வலம் வந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் நடிகை குஷ்புவை பாலியல் குறித்த பிரச்சனைகளை நீங்கள் சந்தித்துள்ளீர்களா என்று ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி கேட்டு வருகின்றனர். இந்த கேள்விக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்த குஷ்பு கூறியதாவது:

40 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் நான் நான் பாலியல் தொல்லையை எதிர்கொண்டிருக்கிறேனா என்று பலர் கேட்கின்றனர். உங்களை ஏமாற்றுவதற்கு மன்னியுங்கள், இதுவரை எனக்கு அப்படி நடந்ததில்லை. என்னுடைய பிரச்சனைகளை நானே அடித்து விரட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அதை மட்டுமே நான் பின்பற்றியதால் எனக்கு எந்த பாலியல் பிரச்சனைகளும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.