பிரச்சாரத்தில் இளைஞரை அறைந்த குஷ்பு

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு செய்து வருகிறார். குஷ்புவின் பேச்சைக் கேட்க ஏராளமானோர் திரண்டு வரும் நிலையில் தேர்தல் களை கட்டி வருகிறது.

கர்நாடகத்தில் குஷ்பு தொகுதி வாரியாக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். இங்கு காங்கிரஸ் ஜனதா தளம் கூட்டணியில் உள்ளது. இந்த வேட்பாளர்களை இவர் ஆதரித்து பேசுகிறார்.

குஷ்புவை பார்க்கும் நோக்கில் பலரும் கூடுகின்றனர். சிலர் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். குஷ்புவிடம் அத்துமீறிய தொண்டர் ஒருவர் குஷ்புவின் மேல் கை வைக்க முயல அந்த இடத்திலேயே குஷ்புவை அவர் அறைகிறார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.