Connect with us

கும்பம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

ராசி பலன்

கும்பம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

இந்த 2019-ம் வருடம் திருகணிதம் முறைப்படி மார்ச் 6-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. ராகு மிதுனம் ராசியிலும், கேது தனுசு ராசியிலும் 18 மாதங்களாக சஞ்சரிக்க போகின்றார்கள். கும்பம் ராசியினருக்கு  ஐந்தாம் இடத்தில் வருகின்ற ராகுவும், பதினோராம் இடத்தில் வருகின்ற கேதுவும் என்ன பலன்களை கொடுக்கப் போகின்றார்கள் என்பதை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

Kumbam ragu kethu peyarchi 2019

பொதுவான பலன்கள்:

இதுவரை ஆறாம் இடத்தில் இருந்த ராகுவால் உங்களுக்கு தாராளமான பணவரவும், அனுபவமிக்கவர்களின் ஆதரவு, செய்கின்ற வேலையில் நல்ல முன்னேற்றத்தை கொடுத்து வந்தார். அதேசமயம் உங்களுக்கு வீண் விரோதங்களையும், அலைச்சல்,  கடன் தொல்லையும் கொடுத்து வந்தார். இனி ராகு மிதுனம் ராசியில் அதாவது உங்களது ஐந்தாம் இடத்திற்கு செல்கின்றார்

ஐந்தாம் இடத்தில் ராகு இருக்கின்ற பொழுது வீண் சந்தேகம், மனக்குழப்பங்கள் வரக்கூடும். தேவையற்ற விஷயங்களை நினைத்து கொண்டு வருத்தப்பட்டு கொண்டு இருப்பீர்கள். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். சிலருக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். அது சம்மந்தமான தொழில், வேலை செய்கின்றவர்கள் பிரமாண்டமாக செயல்பட்டு வெற்றியும் பெறுவார்கள். உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி ஏதேனும் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து சேமிக்க தொடங்குவீர்கள். மூத்தவர்களின் ஆலோசனையும், அறிவுரையும் கிடைக்கும்.

ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் இருக்கின்ற கேதுவால் தூக்கமின்மை, கனவு தொல்லைகள், விரயச் செலவுகளை சந்தித்து வந்து இருப்பீர்கள். இனி கேது பெயர்ச்சியாகி உங்களது பதினோராம் இடத்தில் வரப் போகின்றார். பொதுவாக 3,6,11 போன்ற இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு-கேது வருகின்ற பொழுது நன்மை செய்ய கடமைப்பட்டு இருக்கின்றார்கள் என்பது சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

கேது உங்கள் ராசிநாதன் சனியோடு இணைந்து 11-ம் இடத்தில்  இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். குரு அதிசாரம் பெற்று பதினோராம் இடத்தில்  சஞ்சரிக்கின்ற பொழுது எதிர்பாராத நன்மைகள் நடைபெறக்கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உங்களுக்கு கொடுக்கின்ற பொறுப்புகளை சிறப்பாக செயல்படுத்துவீர்கள். உங்களது செல்வாக்கு உயரும். புதிய வாய்ப்புகள் வரக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கூடிய புதிய வேலை கூட அமையக்கூடும். வேலையின்றி இருக்கும் கும்பம் ராசியினருக்கு முயற்சி செய்தால் நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். கேது சாதகமாக உங்கள் ராசிநாதன் சனியுடன் இருப்பதால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு போட்டி தேர்வு, வங்கித் தேர்வு, மாநில பொதுத் தேர்வுகளில் முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்கின்றது. புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். அக்டோபர் மாதம் குரு பெயர்ச்சியாகி 11-ம் வீட்டில் வருகின்ற பொழுது எதிர்பாராத வகையில் மாற்றங்கள் உண்டாகும். கணினித் துறை, இரும்பு, உணவு, ப்ரோக்கரேஜ், ரியல் எஸ்டேட், கமிஷன் போன்ற வகையால் லாபம் அடைவீர்கள். வியபாரத்தில் பழைய சரக்குகளை விற்று தீர்ப்பீர்கள். உங்களது யுக்திகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை பெருக்குவீர்கள்.

மாணவ – மாணவியர்கள்:

குருவின் பார்வையால் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகள், நீட் தேர்வுகள் எழுதும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும்.

குடும்பம்:

இல்லத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். திருமணம் ஆகாத கும்பம் ராசியினருக்கு நல்ல வரன் அமையக்கூடும். மனதில் புதிய தெளிவு பிறக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் மீண்டும் உங்கள் மேன்மை புரிந்து கொண்டு இணைவார்கள். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வேலை செய்யும் பெண்களுக்கு நல்ல வளர்ச்சி இருக்கும். சொந்த பந்தங்கள் மீண்டும் உங்களிடம் நெருங்கி பழகுவார்கள். சிலருக்கு உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். உங்களது கனவுகள், ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்க வேண்டாம்.

உடல்நலம்:

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கக்கூடும்.

வணங்க வேண்டிய தெய்வம்:

சுபகாரியத் தடைகள் விலக துர்க்கை அம்மனுக்கு ராகு கால நேரத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள். வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வாருங்கள். ராகுவால் ஏற்பட்ட பண நெருக்கடி மற்றும் கடன் தொல்லைகள் விலக அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டு வாருங்கள்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading

அதிகம் படித்தவை

To Top