கும்பம் ராசி ஏப்ரல் மாதம் ராசி பலன்கள் 2018!

கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த ஏப்ரல் மாதம் கடின உழைப்பாலும், விடாமுயற்சியுடன் செயல் புரிந்தால் வெற்றி பெறும் மாதமாக இருக்கப் போகிறது. பக்குவமான பேச்சால் வெற்றி பெறுவீர்கள். குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் இருப்பதால் இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். குரு பகவான் ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பாதல் பூர்வீக சொத்துகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும்.

ஒரு சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். வேலைப்பளு குறையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும்.  கேது பகவான் பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் திடீர் பயணங்கள் உண்டாகும். ஆன்மீக சுற்றலா சென்று வருவீர்கள். குலதெய்வ வழிபாடு மற்றும் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ராகு பகவான் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். ஒரு சிலருக்கு பிள்ளைகளால் மன  உளைச்சல் மற்றும்  அலைச்சலும் ஏற்படக்கூடும்.

உங்கள் ராசியிலிருந்து 12-ம் வீட்டில் ஏப்ரல் 30-ம் தேதி செவ்வாய், கேதுவுடன் இணைவதால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டு கொண்டே இருக்கும்.  தூர பயணங்கள் மற்றும் வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும்.

சனி பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் செய்கின்ற காரியங்கள் யாவும் விரைந்து முடித்து விடுவீர்கள். உங்களின் வங்கி கணக்கில் பணவரவு உயரும். தொலைநோக்கு சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் கூடும்.சாமர்த்தியமாக பேசி அனைவரையும் கவர்வீர்கள்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

செய்கின்ற தொழிலில் போட்டி, பொறாமை உண்டாகும். அதனை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.

சுய தொழில் தொடங்குவதற்கு நல்ல நேரமாக இந்த மாதம் அமைகிறது.