வடிவேலுதான் எனக்கு எல்லாம்- கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ணமூர்த்தி இவர் சில படங்களின் புரொடக்சன் மேனேஜர். தவசி படத்தில் ஓசாமா பின்லாடனின் அட்ரஸை இவர் கேட்பது மிகப்பெரிய ஹிட் காமெடி ஆகும். தொடர்ந்து வடிவேலுடன் கருப்பசாமி குத்தகைதாரர், வேல் உள்ளிட்ட படங்களில் இவரின் காமெடி பேசப்பட்டது.

சினிமா கலைஞர்கள் பலர் வடிவேலுவை பற்றி தாறுமாறாக நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்து கொண்டிருக்க இவர் மட்டும் வடிவேலுவை வானளாவ புகழ்கிறார். பார்க்கிற கேட்கிற எல்லாவற்றையும் காமெடியாக்கும் திறமை வடிவேலுவை தவிர யாருக்கும் வராது என்றும் ப்ரண்ட்ஸ் படத்தில் இவர் நடிக்க வேண்டியது சில காரணங்களால் நடிக்க முடியாமல் போய் அந்த பெயரைத்தான் ரமேஷ்கண்ணாவுக்கு கதாபாத்திர பெயராக வைத்தாராம் வடிவேலு.

அதே போல் சினிமாவில் அவருடன் சேர்ந்து வாய்ப்பு தேடிய மறைந்தஅவரது நண்பரும் அவரது மேனேஜருமான முருகேசனின் பெயரைத்தான் சந்திரமுகி படத்தின் கதாபாத்திரத்தில் வைத்தாராம்.

எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்கும் நல்ல மனிதர் என நெகிழ்ச்சியுடன் ஒரு வார இதழின் பேட்டில் இவர் கூறியுள்ளார்.