Connect with us

தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி: பெரும் பரபரப்பு

செய்திகள்

தமிழக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி: பெரும் பரபரப்பு

தமிழகத்தில் ஏற்கனவே எம்எல்ஏக்கள் சேப்பாக்கம் ஜெ அன்பழகன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும், இதில் சேப்பாக்கம் எம்எல்ஏ அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தார் என்பதனை எம்.எல்.ஏ பழனி அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தமிழக அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு நேற்று நேற்று தனியார் மருத்துவமனையில் கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது

இதையடுத்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களுக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை வீட்டில் சென்று தனிமைப்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளனர்,. இதனையடுத்து அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் தற்போது தனது வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்

மேலும் சென்னையில் கொரோனா வைரஸின் பாதிப்பை குறைக்க சமீபத்தில் தமிழக அரசு ஐந்து நபர் குழுவை அமைத்தது என்பதும், அந்த குழுவில் கேபி அன்பழகன் அவர்கள் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது தமிழக அமைச்சர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Continue Reading
To Top