Connect with us

கொரோனாவை மறைத்த சீன இளைஞருக்கு ஒன்றரை வருடங்கள் சிறை

செய்திகள்

கொரோனாவை மறைத்த சீன இளைஞருக்கு ஒன்றரை வருடங்கள் சிறை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த நோய் தொற்று ஏற்பட்ட இடம் சீனா என்பதால் சீன மக்கள் மீது உலக மக்கள் அனைவரும் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் சீனாவின் ஹேனன் மாகாணம் ஜெங்ஜோ நகரை சேர்ந்த ஜிய் என்ற இளைஞர் வெளிநாடு சென்று வந்துள்ளார். வெளிநாடு சென்று வந்து விட்ட அது குறித்த விவரங்களை மறைத்துள்ளார்.

அதிகாரிகள் கண்டுபிடித்து அவரை மொபைலில் தொடர்பு கொண்டபோது தனது தாயிடம் மொபைலை கொடுத்திருக்கிறார். அத்தோடு அலுவலகம், வீடு என ஊர் சுற்றி இருக்கிறார் இதை கேள்விப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்காத ஜிய் என்ற அந்த இளைஞரை பிடித்து விசாரித்து சோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதிகாரிகளை அலைய விட்ட அந்த இளைஞருக்கு ஒன்றரை வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top