Connect with us

கொரோனாவை விட வேகமாக பரவும் திமிர் பிடித்த தினேஷ்

செய்திகள்

கொரோனாவை விட வேகமாக பரவும் திமிர் பிடித்த தினேஷ்

தினேஷ் இந்த பெயர் நேற்று காலை யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் நேற்று இரவில் இருந்து இவர்தான் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டவர்.

எப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என தெரியாமல் அடுக்குமொழி வசனங்களை பேசி அடிவாங்கியவர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்த இவர், தேவையில்லாமல் ஊர் சுற்றியதால் அறந்தாங்கி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தன்னை தடுத்து நிறுத்திய பெண் போலீசிடம் நீங்க இங்க இருக்கலாமா? உங்களுக்கு கொரோனா வராதா? முதல்ல கொரோனாவ காட்ட சொல்லுங்க முதலமைச்சர வர சொல்லுங்க என அதிகம் ரூல்ஸ் பேசினார்.

ஓவரா ஆடாதடா என பெண் போலீசார் பேச்சை மீறி இவர் பேசினார். இதனால் அறந்தாங்கி காவல் நிலையத்தில் வைத்து நன்கு கவனிக்கப்பட்டார்.

இவர் அடி வாங்கும் வீடியோதான் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

என் உரிமை மறுக்கப்படும்போது நான் அயல்நாட்டுக்கு அடிமையாகுறேன் என நாம் தமிழர் கட்சி பாணியில் இவர் பேசியது இவர் அந்த கட்சியை சேர்ந்தவராக இருக்கும் என தெரிகிறது.

நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் இவர் வேகமாக கொரோனாவை விட ஸ்ப்ரெட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top