கூட்ட நெரிசலில் திருப்பதி வெங்கடேசப்பெருமாளை சரியா வணங்க முடியலியா?!

திருப்பதியில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகின்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டி இருப்பதால், பக்தர்களை சில நொடிகள் நேரத்திற்கு மேல் நிற்க விடாமல் தேவஸ்தான ஊழியர்கள் தள்ளிக்கொண்டே இருப்பார்கள் . கூட்டத்தின் தள்ளுமுள்ளு காரணமாக திருப்பதி ஏழுமலையானை கண்குளிர காண்பதே அரிது. அதில் அவரிடம் நமது கோரிக்கையினை சொல்வது எப்படி?!

திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது. அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது. மற்றநாட்களில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார்.கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார் , வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகம விதியாகும்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கருவரை விமானத்தில் பரமபதநாதர் அருகில் வெள்ளி தோரணத்தில் காட்சி தருபவர்தான் விமான வெங்கடேஸ்வரர். ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது. இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம். “..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,இவருகிட்ட உங்களோட வேண்டுதல்களை சொல்லலாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று இவரை தரிசிக்கலாம். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

அதனால, அடுத்தமுறை திருப்பதி செல்லும்போது விமான வெங்கடேசப்பெருமாளை கண்ணாற வணங்கி மனசார உங்க கோரிக்கைகளை அவரிடம் சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews