கோமாளி பட பர்ஸ்ட் லுக்

சில மாதம் முன் ஜெயம் ரவி நடித்த அடங்க மறு திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு நல்ல ஒரு திரை விருந்தை தந்தது. அந்த வகையில் தற்போதைய வெற்றிப்பட நடப்பு சாம்பியனாக ஜெயம் ரவி இருக்கிறார்.

இப்போது அடுத்த வெற்றியை குறிவைத்து கோமாளி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. அதில் வித்தியாசமான தோற்றத்தில் அவர் இருக்கிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார் ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

காமெடிக்கு யோகிபாபு நடிக்கிறார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி 9 விதமான கெட்டப்களில் நடிக்கிறார். நவராத்திரி படத்தில் சிவாஜி நடித்த பிறகு 9 வித கெட்டப்களில் நடிப்பது ஜெயம் ரவியாகத்தான் இருக்கும்.

இதில் ஆதிவாசி,ஐடி இளைஞன் உள்ளிட்ட வேடமும் அடங்குமாம்.

பிரதீப் ரங்கநாதன் என்பவர் இயக்குகிறார்.