ரன் மழை பொழிந்த கொல்கத்தா அணி! அடிச்சது இந்த நாலு பேரு மட்டும்தான்!

மும்பை அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையிலான ஐபிஎல் 2019 தொடரின் 47வது போட்டி கொல்கத்தாவில் நடைப்பெற்றது.

Kolkata knight riders

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. சுப்மான் கில் 45 பந்துகளில் 76 ரன்களும் கிறிஸ் லைன் 29 பந்துகளில் 54 ரன்களும் எடுத்தனர். ஆண்ட்ரு ரஸல் அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 80 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புடன் 232 ரன்களை குவித்தது. இது 200 ரன்களை கடந்த போட்டிகளில் சிறப்பான விளையாட்டாக இப்போட்டி இருந்தது.

மும்பை அணியில் ராகுல் சாகர் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர்.

அடுத்து மும்பை அணி 233 என்ற கடினமான இலக்குடன் பேட்டிங் செய்தது. தொடக்க வீரரான குயின்டன் டி காக் டக் ஆனார். தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். ஆனால் ஹர்திக் பாண்டியா மட்டும் சூறாவளியாக சுழன்று 34 பந்துகளில் 91 ரன்களை குவித்தார்.

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புடன் 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இப்போட்டியில் ஆட்ட நாயகனாக ஆண்ட்ரு ரஸல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.