Connect with us

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ பர்ஸ்ட்லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி

பொழுதுபோக்கு

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ பர்ஸ்ட்லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று ‘கோலமாவு கோகிலா’ இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனையடுத்து மூன்றே நாளில் அதாவது மார்ச் 8ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, சரண்யா, யோகிபாபு, ஜாகுலின், நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் கேமிராவும், நிர்மல் எடிட்டிங் பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top