கொலையுதிர்காலம் தயாரிப்பாளரை பாராட்டிய விக்னேஷ் சிவன்

நயன்தாரா நடிப்பில் கடந்த வருடமே வரவேண்டிய படம் கொலையுதிர்காலம். தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினையால் படம் வெளிவர முடியாத நிலை இருந்தது. இப்படத்தை எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன் இப்படத்தை வெளியிட உள்ளார். 

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்த படம் உலகெங்கிலும் வெளியாவதற்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளார்.  மேலும், ‘இந்த படத்தை பார்த்தேன். நல்ல திரில்லர் திரைப்படமான இதனை பார்வையாளர்கள் ரசிப்பார்கள். திரில்லர் படங்களின் வரிசையில் இந்த படமும் கவனம் பெறும் . நயன்தாரா உள்ளிட்ட நடிகர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். சக்ரி டலோட்டி தலைமையிலான குழுவினர் தொழில்நுட்பங்களை நன்றாக வைத்து தரமான படமாக கொண்டு வந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் தனது தயாரிப்பு மீது நல்ல கவனமும் அக்கறையும் கொண்டுள்ளார். தனிப்பட்ட முறையில் நமக்குள் கசப்பான தருணங்கள் இருந்தாலும் முடிவில் நல்ல பேச்சுவார்த்தையினால் எல்லாம் சுமுகமாக முடிந்தது.