Connect with us

மீண்டும் சிக்கலில் கொலையுதிர்காலம்

பொழுதுபோக்கு

மீண்டும் சிக்கலில் கொலையுதிர்காலம்

உன்னைப் போல் ஒருவன், பில்லா 2 உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் சக்ரி டொலோட்டி இதில் பில்லா 2 தோல்வியடைந்தது. உன்னைப்போல் ஒருவன் ஓரளவு பேசப்பட்டது. தமிழில் நீண்ட நாள் படம் இயக்காமல் இருந்த இப்பட இயக்குனர் நீண்ட இடைவேளைக்கு பிறகு நயன்தாராவை வைத்து கொலையுதிர் காலம் என்றொரு படத்தை இயக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகிவிட்டது. இந்த படம் தயாரிப்பு நிறுவனத்தின் சில பிரச்சனைகளால் வெளியாகாமல் தாமதமாக சென்றது
 

இந்நிலையில் வேறு ஒரு தயாரிப்பாளர் மூலம் வருகிற ஜூன் 14ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் வாங்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி குமார். இவர் விடியும் முன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதனால் கொலையுதிர்காலம் என்ற பெயரில் படம் வெளியிடக்கூடாது என கோர்ட்டில் தெரிவித்துள்ளார்.
 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி ராமசாமி, கொலையுதிர் காலம் என்ற பெயரில் நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து மனுவுக்கு ஜூன் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
 

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top