Connect with us

கொலைகாரனுக்கு என்ன சான்றிதல் கிடைத்தது

பொழுதுபோக்கு

கொலைகாரனுக்கு என்ன சான்றிதல் கிடைத்தது

படித்தவுடன் கொலைகாரனுக்கு கொலைகாரன் சான்றிதழ் தானே கொடுப்பாங்கன்னு நீங்க சொல்றது இங்கு கேட்கிறது. அந்த கொலைகாரன் நாம் சொல்றது கொலைகாரன் படத்துக்கு என்ன சான்றிதழ் கொடுத்தாங்க என்பது.

பரபர த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் கொலைகாரன் படத்தில் விஜய் ஆண்டனி கொலைகாரனாக நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக அர்ஜூன் நடித்துள்ளார். வரும் ஜூன் 5ம் தேதி ரம்ஜானை ஒட்டி இப்படம் ரிலீஸ் ஆகிறது.

தினமும் ஒரு படத்தோடு ஒப்பிட்டு இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்படுகிறது. பொம்மை, சிகப்பு ரோஜாக்கள், உச்சக்கட்டம், அந்த நாள் என தினம் தினம் ஒரு படத்தோடு ஒப்பிட்டு இப்பட போஸ்டர்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

மேற்சொன்ன படங்கள் எல்லாம் த்ரில்லர் படங்களாகும். இப்படங்களோடு ஒப்பிட்டு போஸ்டர் வருவது பழைய த்ரில்லர் பட ரேஞ்சில் இருக்குமா என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு யு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதன் மூலம் த்ரில்லர் கொலை காட்சிகளும், குடும்பத்தோடு பார்க்கும் காட்சிகளும் கலந்த சரிவிகித கலவையாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ரு லூயிஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top