Connect with us

ஆளை விடுங்கடா சாமி… இனி இதெல்லாம் வேண்டாம்… புலம்பும் கோலி!!

விளையாட்டு

ஆளை விடுங்கடா சாமி… இனி இதெல்லாம் வேண்டாம்… புலம்பும் கோலி!!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான பகல் இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.

இரு அணி வீரர்களும் பிங்க் பந்தினையும், பகல்- இரவு ஆட்டத்தையும் சமாளிப்பது எப்படி என்ற பெரும் நெருக்கடியிலேயே உள்ளனர்.

ஆளை விடுங்கடா சாமி… இனி இதெல்லாம் வேண்டாம்… புலம்பும் கோலி!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பகல்- இரவு ஆட்டம் நெருக்கடியான ஒரு விஷயமாக உள்ளது, இந்தப் போட்டிகள் மீண்டும் தொடர வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “பிங்க் நிற பந்தினை எதிர்கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டபோது, நாங்கள் கணித்ததைவிட இது கடினமான விஷயம் என்பதை உணர்ந்தோம்.

பிங்க் பந்து பேட்ஸ்மேன்களுக்கு கடினம் என்ற நினைத்த நிலையில், பீல்டிங்க் செய்பவர்களுக்கு அது கடினமாக உள்ளது, அதன்மீதான அரக்கு பூச்சு பந்தினை கனமாக்குவதோடு, கையில் விழும்போது அதனை எதிர்கொள்வது கடினமான ஒன்றாக உள்ளது.

விக்கெட் கீப்பர் விக்கெட்டை கைப்பற்ற பந்தை வீசுவதும்கூட கடினம் தான். மாலை நேரத்தில் இந்த பந்து கையை அடையும் வேகத்தினை கணிக்க முடியவில்லை.

தூரத்தில் வருவது போன்று தெரியும் இந்த பிங்க் பந்து, திடீரென அருகில் வந்துவிடுகிறது. இதனால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

டெஸ்ட் கிரிக்கெட் பகல்- இரவு போட்டியாகத்தான் இருக்கும் என்ற நிலை உருவாகக் கூடாது, டெஸ்ட் கிரிக்கெட்டில் கொண்டுவர இன்னும் நிறைய மாற்றங்கள் உள்ளன.

அதுபோன்று வேறு ஏதாவது யோசனை செய்து ரசிகர்களைக் கவர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top