கொளுத்தும் வெயில் கோடை வாசஸ்தலங்களில் சுற்றுலா பயணிகள்

ஏப்ரல் மாதம் வந்து விட்டாலே வெயில் நம்மை வாட்டி எடுத்து விடும். அதுவும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் என்றாலே பலருக்கு அலர்ஜிதான். அதிக வெப்பத்தை ஏற்படுத்தி மனிதர்களை ஒரு வழி ஆக்கி விடும்.

வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்கு வந்து மின் விசிறியை போட்டால் காற்று வராமல் வெறும் வெப்பம் மட்டுமே வரும். இதை தணிக்க பலரும் கோடை வாசஸ்தலங்களுக்கு டூர் சென்று விடுகின்றனர்.

கோடை வந்து விட்டாலே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி,குற்றாலம் போன்ற இடங்கள் களை கட்டி விடுகின்றன.

கொடைக்கானலில் சீசன் ஆரம்பித்ததில் இருந்து டிராபிக்கில் சிக்கி தவித்து வருகிறது. அந்த அளவுக்கு வாகனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

சீசனும் இப்போதுதான் ஆரம்பித்துள்ளது.

அதே போல் குற்றாலம் போன்ற பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளதால் தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் கோடை வாசஸ்தலங்கள் களை கட்டி வருகிறது.