நடு ரோட்டில் வாகனங்களை மறித்து ஹெல்மெட் கேட்டு கிரண்பேடி அதிரடி

டெல்லி திகார் சிறையை நிர்வாகம் செய்து மிக புகழ்பெற்றவர் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி .இவரின் அதிரடி செயல்களால் இவர் ஓய்வுக்கு பிறகு தற்போதைய பாஜக ஆட்சியிலே புதுச்சேரி கவர்னர் ஆக்கப்பட்டார்.

கவர்னர் ஆனதில் இருந்து தொடர்ந்து புதுச்சேரியில் பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார். முதல்வர் நாராயணசாமியின் ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு பல கருத்துக்களை கூறி வந்ததால் கவர்னருக்கும் , நாராயணசாமிக்கும் மிகுந்த பனிப்போர் நிலவி வருகிறது.

இந்நிலையில் இன்று வாகனங்களை போலீசாரோடு சேர்ந்து சோதனை மேற்கொண்ட கிரண்பேடி இருசக்கர வாகனங்களில் வருபவர்களிடம் ஹெல்மெட் எங்கே என கேட்டு அபராதம் கட்டசொன்னார்.

ஹெல்மெட் அணிந்து வராதவர்களிடம் ஹெல்மெட் அணிந்து வர சொல்லி அட்வைஸ் வழங்கினார்.

பின்பு நிருபர்களிடம் பேசுகையில் ஹெல்மெட் அணிந்து வராததால் ஏற்படும் விபத்துக்கள் குறித்தும் அதன் அவசியம் குறித்தும் பேசினார்.