அதிரடியாக ரன்களை குவித்து வெற்றிப் பெற்றது கொல்கத்தா அணி!

ஐபில் தொடரின் 6வது போட்டி கொல்கத்தா அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே கொல்கத்தாவில் நடைப்பெற்றது.

Kolkata knight riders

இப்போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் கிறிஸ் லைன் 10 ரன்களில் வெளியேறினார். சுனில் நரேன் 9 பந்துகள் மட்டுமே ஆடினாலும் 24 ரன்களை எடுத்தார். ராபின் உத்தப்பா சிறப்பாக விளையாடி 67 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேபோல் நிதிஷ் ராணாவும் அதிரடியாக விளையாடி 63 ரன்களை குவித்தார். ஆண்ட்ரு ரஸல் 17 பந்துகளில் 48 ரன்களை குவித்து அசத்தினார்.

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புடன் 218 ரன்களை குவித்தது.

பஞ்சாப் அணியில் முகமது சமி, வருண் சக்ரவர்த்தி, ஹார்டஸ் வில்ஜோன் மற்றும் ஆண்ட்ரு டை நால்வரும் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

பஞ்சாப் அணி 219 என்ற கடினமான இலக்கை நோக்கி அடுத்து பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான கே எல் ராகுல் ஒரு ரன்னில் வெளியேறினார். கிறிஸ் கெயிலும் 20 ரன்களில் வெளியேறினார். ஷர்ஃப்ராஸ் கான் 13 ரன்களில் வெளியேறினார். மாயன்க் அகவர்வால் 58 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் 59 ரன்களும், மன்தீப் சிங் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்கமால் இருந்தனர்.

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புடன் 190 ரன்கள் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிப் பெற்றது.

கொல்கத்தா அணியில் ஆண்ட்ரு ரஸல் 2 விக்கெட்டுகளும், லோகி பெர்குசன் மற்றும் பியூஸ் சாவ்லா இருவரும் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இப்போட்டியில் ஆண்ட்ரு ரஸல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.