சங்கீத மேகத்தை தேன் சிந்த வைத்த கவிஞர் முத்துலிங்கம்

எம் .ஜி.ஆரின் தீவிர ரசிகரான கவிஞர் முத்துலிங்கம் ஒரு தெக்கத்திக்காரர். சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். முரசொலியில் ஆரம்பத்தில் வேலை பார்த்த முத்துலிங்கம், எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்ததால் இவரும் விலகினார்.

பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தின் மூலம் கவிஞராக அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர் படங்களுக்கு பாடல்கள் எழுதியதன் மூலம் முன்னணி கவிஞரானார்.

எம்.ஜி.ஆரின் உழைக்கும் கரங்கள் தொடங்கி அவரின் கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வரை இவர் தொடர்ந்து எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா முத்துலிங்கம் கூட்டணியில் வந்த பாடல்கள் தமிழ் சினிமாவில் மிக பிரசித்தம். எண்பதுகளின் வெள்ளி விழா நாயகனின் மேடைப்பாடகராக மைக் பிடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இன்றைக்கும் மோகனின் மேடைப்பாடல் என்றால் கண் முன்னே டக்கென்று விரிவது கவிஞர் முத்துலிங்கம் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்த சங்கீத மேகம் பாடல்தான்.

ஓர் உயர்ந்த ரசனையுடன் இப்பாடலை எழுதி இருந்தார் கவிஞர் முத்துலிங்கம்.

சின்ன சின்ன் ரோசாப்பூவே, ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே என இளையராஜா இசையமைத்த பல படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார்.

பல வருடங்கள் இரவு முழுவதும் விடிய விடிய உட்கார்ந்து தொடர்ந்து எழுதியதால் 14 வருடங்கள் வரையில் பகலிலும் இரவிலும் தூங்காமலே வாழ்ந்திருக்கிறார். இயற்கையாகவே இவரது தூக்கம் போய்விட்டதாம் இவருக்கு.

பல சாதனைகளை எட்டிய கவிஞர் முத்துலிங்கம்  ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமான திரைப்பாடல்களை எழுதியவர், கலைமாமணி, பாவேந்தர் பாரதிதாசன் விருது, சிறந்த பாடலாசிரியர் விருது, கலைத்துறை வித்தகர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்; முன்னாள் அரசவைக் கவிஞர்; முன்னாள் மேலவை உறுப்பினர்.

கவிஞர் முத்துலிங்கத்துக்கு இன்னும் பல சாதனை படைக்க இறைவன் அருளட்டும்.