கரு. பழனியப்பனை கிண்டலடித்த கஸ்தூரி

இயக்குனர் கரு. பழனியப்பன் இவர் இயக்கிய படங்கள் மிக குறைவே. ஆனால் எதையும் தெளிவான சிந்தனையுடன் பேசக்கூடியவர். பேச்சில் அசத்துபவர். தென்மாவட்ட இயல்பான மொழியில் எதையும் சுவைபட பேசுவார்.

இருந்தாலும் கடவுள் மறுப்பு, கம்யூனிசம், போன்ற முற்போக்கு கருத்துக்களை இவர் பேசுவது பெரும்பாலும் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

இதுவரை பொதுவான முற்போக்காளர் போல்தான் தன்னை வெளிப்படுத்தி வந்திருக்கிறார் கரு. பழனியப்பன். தன்னை கட்சி சார்ந்தவர் போல் காட்டிக்கொள்ள மாட்டார்.

இந்நிலையில் நேற்று கனிமொழியுடன் அவர் மேடையேறி பேசியது அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.

பொதுவானவர் போல் காட்டிக்கொண்ட கரு. பழனியப்பன் எதற்காக திமுக மேடையேற வேண்டும் என கேட்டுள்ளனர். அப்போ அவர் திமுகதான் என பலரும் மீம்ஸ் போட்டு சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் தன் பங்குக்கு ஒரு டுவிட் செய்துள்ளார்.

அந்த கிண்டல் டுவிட் இதோ

கடைசியில கரு பழனியப்பன் திமுகவா…. நான் கூட சிவப்பு சிந்தனையாளர், சு.வெ க்கு மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்… ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல.

குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல் !