அய்யப்பன் கோவிலுக்கு போராடியவங்க இதுக்கு போராடுவாங்களா- கஸ்தூரி

கஸ்தூரி அதிரடிக்கு பெயர் போனவர் பல அதிரடியான கருத்துக்களை டுவிட்டரில் எழுதி பரபரப்பாகவே இருப்பார். இவரிடம் கட்சிக்காரர்கள், நடிகர்களின் ரசிகர்கள் என யாராவது அவரது கருத்து பிடிக்காமல் மோதிக்கொண்டே இருப்பார்கள்.

தினமும் ஏதாவது அதிரடி காட்டும் கஸ்தூரியின் இன்றைய அதிரடி என்னவென்றால் சினிமா ஜெனரேட்டர் வண்டியாகும்.

சினிமா ஜெனரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் மட்டும்தான் அனுமதி லேடிஸ் நாட் அலவ்ட் என்று எழுதியுள்ளது. இதை எதிர்த்து டுவிட் செய்துள்ள கஸ்தூரி கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.

சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட கூடாது …. காரணம் தீட்டாம் ! என கஸ்தூரி அதிரடியாக பதிவிட்டுள்ளார்.