காஷ்மீர் தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 44 பேர் பலி

காஷ்மீரில் நேற்று ஜெய்ஸ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பலியாகினர்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலாப்பேரியை சேர்ந்த தமிழக வீரர் சுப்ரமணியம் என்பவரும் பலியாகினார்.

44 வீரர்கள் பலிக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனால் பாகிஸ்தான் இந்தியா போர் மேகம் சூழ்ந்த நிலையில் உள்ளது.

இந்த தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இன்று காலை 9.15 மணிக்கு பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு கூட்டம் கூடவுள்ளது.

அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்டோரும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இத்தாக்குதலுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.