சுதந்திர தினத்தில் கொடியேற்றிய முதல் முதல்வர் கருணாநிதிதான்!!

1947 ஆம் ஆண்டு இந்தியா ஆங்கிலேயர்களிடம் போராடி சுதந்திரம் பெற்றது, காந்தியடிகளின் அகிம்சை முறைகளின் மூலம் இந்தியா பல ஆண்டுகளாக பலவித இன்னல்களை சந்தித்து, ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரத்தினைப் பெற்றது.


சுதந்திர இந்தியவின் முதல் கொடியினை அப்போதைய பிரதமர் நேரு அவர்கள் ஏற்றினார். 1947 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மத்திய ஆட்சியைப் பொறுத்தவரையில், பிரதமரே கொடியை ஏற்றுவதே வழக்கமாக உள்ளது.

குடியரசுத் தலைவர் தொலைக்காட்சியில் உரையாற்ற மட்டுமே செய்வார், ஆனால் மாநிலங்களைப் பொறுத்தவரையில், 1973 ஆம் ஆண்டு வரை மாநில ஆளுநரே கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி வந்தார்.

அப்போ இந்த முறை எப்போது மாறியது? யாரால் மாறியது? என்பது பற்றி பல பேருக்கு இன்னும் தெரியாது.

அதற்கு காரணம் வேறு யாருமல்ல, நம்முடைய முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்தான். இந்திராகாந்திக்கு கொடியேற்றுதல் குறித்து அதிகாரப் பூர்வ அனுமதியைக் கேட்டுப் பெற்றார். அதனையொட்டி 1974 ஆகஸ்ட் 15ம் தேதி கருணாநிதி தேசியக் கொடியை ஏற்றினார்.