மிக தாமதமாக வருத்தம் தெரிவித்த கருணாகரன்

தீபாவளியின் போது வெளியானது விஜய் நடித்த சர்கார். இந்த நேரங்களில் விஜய் ரசிகர்களுக்கும் நடிகர் கருணாகரனுக்கும் மிகப்பெரும் போரே அரங்கேறி இருந்தது. விஜய்யின் படம் பற்றியும் வேறு சில விஷயங்கள் பற்றியும் மிக அதிகமாக விமர்சித்ததால் விஜய் ரசிகர்கள் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முதல் கொண்டு ஒட்டி மிக கடுமையாக எதிர்த்தனர்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் பற்றி தான் கூறியது தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள் . விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.

விஜய் சொன்ன குட்டி கதையில் குறிப்பிட்டது அரசியலையா? சினிமாவையா என்று தெளிவாக சொல்லவில்லை என்றுதான் எனக்கு கோபம் வந்தது என கூறியுள்ளார்.

மிக நீண்ட நாட்கள் கழித்து கருணாகரன் மன்னிப்பு கேட்டதால் இப்பிரச்சினை இத்தோடு முற்றுப்புள்ளிக்கு வந்து விட்டது என அறியலாம்.