Connect with us

அமெரிக்காவில் தயாராகும் கார்த்திக் சுப்பராஜ் – தனுஷ் படம்

பொழுதுபோக்கு

அமெரிக்காவில் தயாராகும் கார்த்திக் சுப்பராஜ் – தனுஷ் படம்

கார்த்திக் சுப்புராஜ், ரஜினி கூட்டணியில் உருவான “பேட்ட” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், மாபெரும் வசூல் சாதனையும் படைத்தது. அவரின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகினர்.

ஆனால், வட சென்னை, மாரி 2 படங்களுக்கு பிறகு அசுரன் படப்பிடிப்பில் தனுஷ் பிசியாக இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படமும் ஒருவழியாக தணிக்கை சான்றிதழ் பெற்று திரைக்கு வர காத்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு, தனுசை வைத்து கார்த்திக் சுப்புராஜ் ஒரு படத்தை இயக்கப்போவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் இருவருமே வேறு படங்களில் பிசியாகிவிட்டனர். இதனால் அவர்கள் இருவரும் இணைய வேண்டிய படம் கைவிடப்பட்டதாக சில செய்திகள் வெளியாகின.

ஆனால் அப்படம் கைவிடப்படவில்லை. தனுஷ் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் தற்போது முழுவீச்சில் கதை எழுதி வருகிறார்.

விரைவில் எழுத்துப் பணிகள் நிறைவுபெற்று ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது. படத்தின் பெரும்பாலான பகுதிகள் நியூயார்க் நகரில் படமாக்கப்பட உள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top