தேர்தல் பிரச்சாரத்தில் அமரன் பாட்டை அமர்க்களமாய் பாடிய கார்த்திக்

நடிகர் கார்த்திக் அரசியலில் தீவிர களம் காண இறங்கியபோது முதன் முதலில் பார்வர்டு ப்ளாக் தமிழ்நாடு மாநில கட்சி தலைவராக இருந்தார். கட்சிப்பணிகளில் இவர் காட்டிய வேகமின்மை அவரது பதவியை பறித்தது. பின்னர் அதில் இருந்து விலகி நாடாளும் மக்கள் கட்சியை ஆரம்பித்தார். நிர்வாக ரீதியாக இவரால் சரியாக செயல்பட முடியவில்லை. பின்னர் அந்த கட்சியையும் கலைத்தார்.

இந்நிலையில் அதிமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்குகள் கேட்ட கார்த்திக் சில நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் பா.ஜ வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டார்.

அப்போது ரசிகர்கள் பாட சொல்லி கேட்க , பல வருடங்களுக்கு முன் அமரன் படத்தில் அவர் பாடிய வெத்தலை போட்ட ஷோக்குல நான் பாடலை சுருதி சுத்தமாக பாடினார்.

போட்டாலே விறுவிறுக்கும் ஜர்தா பட் என அருமையாக அவர் இழுத்து பாடியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அதே போல் அவரது பேச்சும் மிக தெளிவாக இயல்பாக இருந்தது. முன்பு கார்த்திக்கின் பேச்சு அவ்வளவாக புரிவதில்லை என்ற நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.