Connect with us

காப்பான் படத்தை விமர்சித்தவர்களுக்கு விக்னேஷ் சிவன் பதிலடி

பொழுதுபோக்கு

காப்பான் படத்தை விமர்சித்தவர்களுக்கு விக்னேஷ் சிவன் பதிலடி

சூர்யா, கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என்ற திரைப்படத்தில் நடித்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான இப்படத்தை பார்த்த சில மணி நேரத்திலேயே ரசிகர்கள் பலர் தவறான விமர்சனங்களை வைத்தனர்.

படம் சரியாக இல்லை. அந்தக்கால விஜயகாந்த் டைப் பார்முலா படமாக இது இருக்கிறது என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

சிலர் ஆரோக்கியமாகவும் விமர்சித்து வருகின்றனர். ஒட்டுமொத்த விமர்சனத்தை வைத்து பார்க்கும்போது படம் சூப்பரும் இல்லை மொக்கையும் இல்லை சுமாரான படம் என்ற ஒரு அனுமானத்துக்கு வர முடிகிறது.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன். படம் சிறப்பாகவே உள்ளது. நடிப்பை திறமையை பாராட்டாமல் தங்கள் புத்திசாலித்தனத்தை காண்பிப்பதற்காகவே பலரும் இப்படத்தை தவறாக விமர்சிக்கின்றனர் என கூறியுள்ளார்.

படத்தை தோண்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் ரசிகர்கள். இந்த காலத்தில் சாதாரண பொதுமக்கள் கூட விமர்சகர்களாகி விடுகிறார்கள் மறப்போம் மன்னிப்போம் என கூறியுள்ளார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top