தற்போதைய அரசியல் பேசும் சூர்யா-காப்பான் பட டீசர்

கே.வி ஆனந்த் இயக்கி வரும் திரைப்படம் காப்பான். சூர்யா மாற்றான், அயன் படங்களுக்கு பிறகு கே.வி ஆனந்துடன் இணைந்திருக்கும் படம்.

கே.வி ஆனந்த் கவண் படத்துக்கு பிறகு இயக்கி இருக்கும் திரைப்படமிது.

பவர்புல்லாக உருவாகி இருக்கும் காப்பான் பட டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கே.வி ஆனந்த், சூர்யா கூட்டணி என்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

மோகன்லாலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தற்போதைய அரசியல் பேசும் படமாக இது இருக்கும் என படத்தின் டீசரை பார்க்கும்போது அறிந்து கொள்ள முடிகிறது.