கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் பெரும் பின்னடைவு!

நடந்து முடிந்த 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலைப் பற்றிய முடிவுகள் வெளியாகி வருகின்றன.

கன்னியாகுமரியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் சார்பில் போட்டிட்ட ஹெச். வசந்தகுமார் முன்னிலை வகிக்கிறார்.

தமிழகத்தில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்தாலும் தேசிய அளவில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை எனும் நிலையில் பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.