ரூ. 55,000 ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை!

காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூத்த தொழிற்சாலை உதவியாளர், துணை மேலாளர் மற்றும் மேலாளர் என மொத்தம் 11 காலியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Aavin jobs

காலிப் பணியிடங்கள்:

மூத்த தொழிற்சாலை உதவியாளர் பிரிவில் 4 பணியிடங்களும், துணை மேலாளர் பிரிவில் 5 பணியிடங்களும், மேலாளர் பிரிவில் 2 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

துணை மேலாளர் பணியிடத்திற்கு சிவில் இன்ஜினியரிங், பி.இ. கணினி அறிவியல், பி.இ. தகவல் தொழில்நுட்பம், எம்.சி.ஏ, ஐடிடி/என்டிடியில் பட்டம், டய்ரி சயின்ஸ்-ல் முதுநிலை பட்டம், பி.டெக் உணவு தொழில்நுட்பம், பி.டெக் டய்ரி டெக்னாலஜி அல்லது பி.டெக் புட் ப்ராசஸிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலாளர் பணியிடத்திற்கு எம்பிஏ, இளநிலை பட்டத்துடன் 2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ அல்லது இளநிலை கால்நடை மருத்துவம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணிடத்திற்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். துணை மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடத்திற்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

மூத்த தொழிற்சாலை உதவியாளர் பணிடத்திற்கு ரூ. 15,700 வரை வழங்கப்படும். துணை மேலாளர் பணியிடத்திற்கு ரூ. 35, 900 வரை வழங்கப்படும். மேலாளர் பணியிடத்திற்கு ரூ. 37,700 முதல் ரூ. 55,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

இந்த காலிபணியிடங்களுக்கு பிப்ரவரி 20, 2019, மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டும்.

விவரம்:

மேலும் இந்த பணியிடங்கள் குறித்து விவரங்கள் அறிய ஆவின் நிறுவனத்தின் இணையதளத்தின் http://www.aavinmilk.com/hrkt050219.html இந்த இணைப்பிற்கு சென்று பார்க்கவும்.