காஞ்சனா 3 எப்படி உள்ளது

காஞ்சனா 3 படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது. முதன் முதலில் முனி என்ற படம் மூலம் தனது பேய்ப்பட புராஜக்டை தொடங்கிய லாரன்ஸ் தொடர்ந்து, பேய்ப்பட சீரீஸாக காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என பயங்கரமான படங்களாக தயாரித்து வருகிறார்.

சிறுவர், சிறுமிகளையும் காஞ்சனா படம் கவர்ந்து வருகிறது. முதல் படமான காஞ்சனாவில் சரத்குமார் வித்தியாசமான அதிரடி திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று வெளியாகியுள்ள படத்தை லாரன்ஸ் தயாரித்திருந்தாலும் சன் பிக்சர்ஸ் தான் படத்தை முழுமையாக வாங்கி வெளியிடுகிறது.

டிரெய்லரிலேயே பயங்கரமாக மிரட்டிய காஞ்சனா 3 இன்று திரையிட்ட இடமெல்லாம் நன்றாக சென்று கொண்டிருப்பதாக முதல் கட்ட பாஸிட்டிவ் ரிசல்ட்ஸ் வந்து கொண்டிருக்கிறது.

முதல் பாதி அருமை என்றும் இரண்டாம் பாதிக்காக வெயிட்டிங் என்றும் படம் பார்க்கும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் பின்னி பெடல் எடுத்து விட்டார் என்றும் படம் பார்த்த ரசிகர்கள் கூறி வருகின்றனர்.