கோபத்தில் டிவியை உடைத்த கமல்

நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் போட்டி இடுகிறது. இதற்காக அவர் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அவ்வப்போது அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்துக்காக விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

அதில் ஸ்டாலின் பேசுவது போல, ஹெச்.ராஜா பேசுவது போல தொலைக்காட்சியில் குரல்கள் கேட்கிறது. அதை பார்த்து கடுப்பாகும் கமல்ஹாசன் டிவியை உடைத்து விடுவது போல காட்சிகள் வருகின்றன.

இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு பின்னான காட்சிகளில்

யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைத்தவர்களுக்கா? நம் உரிமைக்காக போராடும்போது நம்மையே அடித்து துரத்தியவர்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நமது நிலத்தை நாசமாக்கி, விவசாயிகளை அம்மணமாக்கி நாட்டை தலைகுனிய வைத்தவர்களுக்கா? ‘எங்க அப்பா, அம்மா யாருக்குஓட்டு போடச் சொல்கிறார்களோ,அவர்களுக்குதான் போடுவேன்’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. என பேசுவதாக முடிகிறது இந்த வீடியோ.

நீட் தேர்வால் உயிரிழந்த பெண்ணின் அப்பா, அம்மாவைக் கேளுங்கள், யாருக்கு ஓட்டு போடக் கூடாது என்று சொல்வார்கள்.

ஆண்டவர் ஏன் டிவியை உடைக்கிறார் என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறக்கின்றன.