மய்யத்தை கண்டு பிடிக்கவே கமலுக்கு டார்ச்- பொன் ராதா கிருஷ்ணன்

கமலஹாசனுக்கு தேர்தல் ஆணையம் நேற்று தேர்தலில் போட்டியிடும் வகையில் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது.

மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அதன் மூலம் கமல்ஹாசன் மையத்தை கண்டுபிடித்து விடுவார் என மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கிண்டலாகக் குறிப்பிட்டார்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணனிடம், காங்கிரஸ் பிரமுகர் விஜயசாந்தி பிரதமர் மோடியை தீவிரவாதி என கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிழைப்பு தேடி அலைபவர்கள் இப்படி தான் கூறுவார்கள் என பதிலளித்தார்.